ஹாட்ரிக் அடித்த நேரம் ஜோடி!

No comments
மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்து ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்களாம் நேரம் ஜோடி. 2011ல் யூவ் என்ற மலையாள ஹிப்-ஹாப் ஆல்பத்துக்காக ஜோடிசேர்ந்த நிவின், நஸ்ரியா இருவருக்கும் அந்த ஆல்பத்தை பார்த்துத்தான் நேரம் படத்தில் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது.

 நேரம் படத்தில் இந்த ஜோடிக்கு கிடைத்த வரவேற்பு இப்போது இன்னொரு மலையாள படத்திலும் அவர்களை மீண்டும் ஜோடி சேர்த்திருக்கிறது. படத்தின் பெயர் ஓம் சாந்தி ஓசானா. 

இந்தப்படத்தை ஜூட் ஆண்டனி என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தின் கதை நஸ்ரியாவை சுற்றியே பின்னப்பட்டிருக்கிறதாம். இந்த விடயம் தெரிந்தாலும் கதை பிடித்துப்போனதால் அதைப்பற்றி கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் நாயகனாக நடிக்க சம்மதித்து விட்டார் நிவின்.


No comments :

Post a Comment