ஐஸ்வர்யா மீது ரசிகர்கள் பாய்ந்ததால் பரபரப்பு : நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்

No comments
ஐஸ்வர்யா ராய் மீது ரசிகர்கள் பாய்ந்ததால் அவர் கடும் கோபம் அடைந்தார். நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு வெளியேறினார். நகை நிறுவனம் ஒன்றுக்கு தூதராக இருக்கிறார் ஐஸ்வர்யா ராய். நேற்று இவர் பஞ்சாபில் உள்ள லுதியானாவில் நகை கடை திறப்பு விழாவுக்கு சென்றார்.

ஐஸ்வர்யா ராய் வருவது தெரிந்ததும் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். ஐஸ்வர்யாராய் அந்த இடத்துக்கு வந்தததும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஐஸ்வர்யாவை தொட்டுப்பார்க்க அவர் மீது ரசிகர்கள் பாய்ந்தார்கள். இதனால் அவர் தடுமாறி கீழே விழ இருந்தார்.

அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை தாங்கிப்பிடித்தனர். கோபம் அடைந்த ஐஸ்வர்யாராய் அங்கு ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு புறப்பட்டார்.

போகிற போக்கில் அவசரமாக ஒரு நிருபர் அவரிடம் கருத்துகேட்டபோது, லுதியானாவுக்கு முதன்முறையாக வருகிறேன். ரசிகர்களின் அன்பு என் மீது பொங்கி வழிகிறது என்று கோபமாக பதில் அளித்தபடி காரில் ஏறி பறந்தார்.

No comments :

Post a Comment