சென்னையில் சர்வதேச திரைப்பட விழா

No comments
சென்னை : செவன்த் சேனல் கம்யூனிகேஷனும், தமிழ் திரைப்பட அகடமியும் இணைந்து கடந்த 9 வருடமாக சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு ரஷ்ய கலாசார மையமும் இணைந்து இப்பட விழாவை சென்னையில் நடத்துகிறது. அடுத்த மாதம் 2,ம் தேதியில் இருந்து மூன்று நாட்கள் நடக்கும் இவ்விழாவில் ஆஸ்ட்ரியா, அல்ஜீரியா, அமெரிக்கா, ஈரான் என பல்வேறு நாடுகளைச் சார்ந்த 15 படங்கள் திரையிடப்படுகின்றன.

 ரஷ்ய கலாசார மையத்தில் நடக்கும் இவ்விழாவை, இயக்குனர் வெற்றிமாறன் தொடங்கி வைக்கிறார்.

ரஷ்ய கலாசார மைய இயக்குனர் மிக்கேல் கோர்படாவ், ஜெர்மனியை சேர்ந்த குளோரியானா, மலேசிய நடிகை சங்கீதா கிருஷ்ணசாமி, செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

No comments :

Post a Comment