அஜீத்துடன் நடிக்க ரேஸ் வீராங்கனை ஆசை

No comments
இந்திய பைக் ரேஸ் வீராங்கனைக்கு அஜீத்துடன் நடிக்க ஆசையாம். அஜீத் நடிப்பில் ஆரம்பம், வீரம் என 2 படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஆரம்பம் படத்தின் பாடல், டிரைலர் வெளியிடப்பட்டது. இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜீத்துடன் ஜோடியாக நடிக்க ஆசைப்படுவதாக பைக் ரேஸ் வீராங்கனை அலிஷா அப்துல்லா தெரிவித்துள்ளார். அலிஷா பைக் வீராங்கனை மட்டுமல்ல கார் ரேஸ் வீராங்கனையும் ஆவார். இவரது தந்தை அப்துல்லா 7 முறை இந்திய அளவில் பைக் ரேஸில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.

 சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா? என அவரிடம்கேட்டபோது, என்னை சிலர் நடிக்க கேட்டனர். ஒப்புக்கொள்ளவில்லை. நான் நடிக்க வருவதாக இருந்தால் அஜீத்துடன் நடிக்கவே ஆசைப்படுகிறேன். ஏனென்றால் அவரும் பைக் மற்றும் கார் ரேஸ் வீரர். மற்றவர்களை விட என்னைப்பற்றி அவரால்தான் நன்றாக புரிந்துகொள்ள முடியும் என்றார்.

No comments :

Post a Comment