'வணக்கம் சென்னை' அக்டோபர் 11-ல் வெளியீடு

No comments
காமெடி சரவெடியாக உருவாகியிருக்கும் படம் ‘வணக்கம் சென்னை’. இப்படத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.


 சமீபத்தில் இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

 இது படக்குழுவினரிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, படத்தை விரைவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, இப்படத்தை வருகிற அக்டோபர் 11-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

No comments :

Post a Comment