7 வருடத்துக்கு பின் மோதும் அஜீத் - விஜய் படங்கள்
ஏழு வருடங்களுக்கு பிறகு, அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் விஜய், அஜீத் நடித்த படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளன. விஜய் நடிக்கும் ‘ஜில்லா‘ படத்தை நேசன் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வந்தது. இப்படத்தை பொங்கலுக்கு முன் ரிலீஸ் செய்ய எண்ணி இருந்தனர். திடீரென்று விஜய் தந்தையாக நடிக்கும் மோகன்லாலுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே ஷூட்டிங் பாதிக்கப்பட்டது.
இதனால், ஏற்கனவே அவர் கால்ஷீட் கொடுத்த படங்களில் நடிப்பதிலும் குழப்பம் ஏற்பட்டது. தற்போது அவர் நடிக்கும் படங்களில் எந்த படம் முதலில் ரீலீஸ் ஆகுமோ, அந்த படங்களுக்கு மட்டும் கால்ஷீட் கொடுத்து வருகிறார். அந்த வரிசையில்தான் ‘ஜில்லா‘ படத்துக்கும் கால்ஷீட்டை ஒதுக்கி தருகிறார் மோகன்லால். இதில் ஹீரோயினாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
இதனால் ‘ஜில்லா’ அடுத்த பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் அஜீத் நடித்துள்ள ‘ஆரம்பம்’ படம், தீபாவளிக்கு ரிலீஸ் ஆனபிறகு அவர் நடித்து வரும் ‘வீரம்‘ படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
7 வருடங்களுக்கு பிறகு விஜய்அஜீத் படம் பொங்க லுக்கு நேருக்கு நேர் மோத உள்ளன. இதனால் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடைசியாக, கடந்த 2007ம் ஆண்டு விஜய் நடித்த போக்கிரி, அஜீத் நடித்த ஆழ்வார் படங்கள் நேருக்கு நேர் மோதின.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment