தமிழில் இன்னொரு ஐஸ்

No comments
ரோஜாவின் மகளாக புதுமுகம் ஐஸ்வர்யா மேனன் நடிக்கும் த்ரில்லர் படம் ‘ஆப்பிள் பெண்ணே’. இதுபற்றி இயக்குனர் ஆர்.கே.கலைமணி கூறியதாவது: ஒரு தாய்க்கும், மகளுக்கும் இடையிலான பாசப் போராட்டத்தை மையமாக வைத்து ஸ்கிரிப்ட் உருவாகி உள்ளது. 

ரோஜா தாயாகவும், புதுமுகம் ஐஸ்வர்யா மேனன் மகளாகவும் நடிக்கின்றனர். தம்பி ராமையா, தேவா, சுசித்ரா ஆகியோருடன் படத்தின் தயாரிப்பாளரான ஜி.கே.பாண்டியனும் நடிக்கிறார். 

தம்பி ராமையா, வில்லன் கதாபாத்திரம் ஏற்றுள்ளார். படத்தில் ரோஜா பாடும் பாடலில் ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற கருத்தை சொல்லும் விதமாக காய்கறி உண்பதால் என்ன பயன் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறோம். 

இது பாட்டாக மட்டுமல்லாமல் நல்ல பாடமாகவும் அமையும். ஒளிப்பதிவு ஸ்டெடிகெம் பிரபாகர். இசை மணிசர்மா. இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடித்து வருகிறார்.


No comments :

Post a Comment