சூடான ஜிகர்தண்டா
படப்பிடிப்பினை முடித்து வெளியீட்டிற்கு தயாராகிறது சித்தார்த்தின் ஜிகர்தண்டா.
அமைதியாக வெளிவந்து அதிரடியாய் ஹிட்டடித்த பீட்சா திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தற்போது இயக்கிவரும் படம் ஜிகர்தண்டா.
மதுரை பின்னணியில் கதை சொல்லப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் சித்தார்த் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடி போட்டுள்ளார் லட்சுமி மேனன்.
வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் அனைவராலும் கவனிக்கத்தக்கவராக மாறியுள்ள சந்தோஷ் நாராயணன் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.
காதலில் சொதப்புவது எப்படி படத்திற்கு பிறகு தற்சமயம் தமிழ்த் திரையுலகில் அதிக கவனம் செலுத்திவரும் சித்தார்த், இந்தப்படம் தனக்கு தமிழில் ஒரு நிலையான இடத்தை பெற்றுத்தரும் என்று நம்புகிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துவிட்ட நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் இறங்கவிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment