சிம்பு- ஹன்சிகா திருமணம் எப்போது? மோனா மோத்வானி

No comments
ஹன்சிகாவுக்கு திருமணம் எப்பொழுது என்பது குறித்து அவரது தாய் மோனா மோத்வானி கூறியுள்ளார். கொலிவுட்டில் டாப் கியரில் சென்ற ஹன்சிகா, தான் சிம்புவை காதலிப்பதை அனைவருக்கும் தெரிவித்தார். 

 இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஹன்சிகா- சிம்பு திருமணம் குறித்து அவரது தாய் மோனா மோத்வானி கூறுகையில், ஹன்சிகா கையில் 9 படங்கள் உள்ளன. அவர் தற்போது மான் கராத்தே படத்தில் நடித்து வருகிறார். 

 அடுத்த மாதம் சுந்தர். சி.யின் அரண்மனை பட ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார் எனவே ஹன்சிகா நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருவதால் இப்போதைக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் மோனா.

 மேலும் துபாயில் நடந்த சிமா விருது விழாவில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை ஹன்சிகா ஸ்ரீதேவியின் கையால் பெற்றுள்ளார். ஸ்ரீதேவியின் கையால் விருது வாங்கியதை நினைத்து நினைத்து பூரிக்கிறாராம் ஹன்சிகா.

No comments :

Post a Comment