தமிழில் சான்ஸ் கிடைக்கல!..கவலையில் அமிதாப்பச்சன்

No comments
தமிழில் எனக்கும் இன்னும் ஒரு சான்ஸ் கூட கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறராம் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சினிமா நூற்றாண்டு விழாவின்போது தான் இந்த கவலையை தெரிவித்துள்ளாராம். 

 இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ் சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகூட எனது இனிய நண்பர்தான். அப்படி பலரும் இருக்கையில் எனக்கு ஒரு படத்தில்கூட இன்னமும் நடிக்க சான்ஸ் கிடைக்காதது வருத்தமாக உள்ளது. 

 ஆனால் ஒருமுறை அந்த வாய்ப்பு ரஜினி நடித்த எந்திரன் படம் மூலம் என் வாசல் கதவை தட்டியது. ஆனால், அது வில்லன் வேடம் என்பதால் நான் நடிப்பதற்கு ரஜினி அனுமதிக்கவில்லை. நீங்கள் போய் எனக்கு வில்லனாக நடிப்பதா? என்று தடுத்து விட்டார். 

 அதேசமயம், கண்டிப்பாக உங்களுக்கு இதைவிட ஒரு நல்ல வாய்ப்பு தமிழில் கிடைக்கும் என்றும் சொன்னார். அதனால் அந்த நல்ல வாய்ப்பு எப்போது கிடைக்குமென்று ஆவலோடு காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் அமிதாப்

No comments :

Post a Comment