வசூல் வேட்டையில் தி கான்ஜூரிங்!

No comments
தமிழில் வெளியாகி வசூல் வேட்டை புரிந்துள்ளது தி கான்ஜூரிங். திரைக்கதையில் ஒளி, ஒலி, இவற்றை மிக சிறப்பாக கையாண்டு ரசிகர்களை மிரட்டுவதில் கில்லாடி என பெயர் பெற்றவர் தான் ஹாலிவுட் இயக்குனரான, ஜேம்ஸ் வான். இதற்கு முன்பு இவர் இயக்கிய இன்சிடியஸ், சா டெட் சைலன்ஸ் போன்ற படங்களும் அப்படியே வென்றன. 

 அதே வகையில் இவர் இயக்கத்தில் ஆங்கிலத்தில் வெளியான தி கான்ஜூரிங் திரைப்படம் சக்கைபோடு போட்டது. தற்போது இப்படமானது தமிழில் வெளியிடப்பட்டுள்ளது
.

 தமிழகத்தில் இப்படத்தினை ஸ்பாட் லைட் மோஷன் பிக்சர்ஸ் 60 திரை அரங்குகளில் வெளியிட்டுள்ளனர். திரை ரசிகர்களின் அமோக ஆதரவில் இப்படம் வெளிவந்த ஒரு வாரத்தில் 4.2 மில்லியன் வசூலை குவித்திருப்பதாக பட வட்டாரம் கூறுகிறது.


No comments :

Post a Comment