கோச்சடையான் உருவானது எப்படி? சவுந்தர்யா பேட்டி
ரஜினி நடித்த கோச்சடையான் உருவான விதம் பற்றி கூறினார் சவுந்தர்யா. ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கும் படம் கோச்சடையான். படம் பற்றி அவர் கூறியது: திரைப்பட அனிமேஷன் தொழில் நுட்பம் மற்றும் பட தயாரிப்பில் நான் கடந்த 6 வருடமாக ஈடுபட்டிருக்கிறேன்.
கோச்சடையான் படத்தை உலக அளவில் ஒரு முன்னுதாரண படமாக உருவாக்க எண்ணினேன். இதற்காக மேஷன் கேப்சர் டெக்னாலஜியை பயன்படுத்தி முழுநீள படத்தை இயக்க முடிவு செய்தேன். இதற்கு முன் இந்த முயற்சியை இந்தியாவில் யாரும் மேற்கொண்டதில்லை.
இந்த தொழில்நுட்பம் மூலம் ஒரு நடிகரின் நடிப்பு திறமை முழுவதையும் பதிவு செய்ய முடியும். எந்த கதாபாத்திரத்தையும் கற்பனைக்கும் எட்டாத அளவில் எந்தளவுக்கும் தோற்றத்தை உருவாக்க முடியும்.
அத்துடன் பிரமாண்ட கட்டிடங்கள், கோட்டை உள்ளிட்ட எந்த வடிவிலும் செட் அமைக்க முடியும். அத்துடன் அதிக பொருட் செலவிலான சண்டை காட்சிகளை படமாக்கலாம். ‘கோச்சடையான்‘ படம் இந்திய சினிமாவை உலக தரத்துக்கு உயர்த்தும். சாதனையாளரான எனது தந்தை ரஜினிகாந்தை இதுவரை யாரும் பார்க்காத தோற்றத்தில் அவரை காட்ட வேண்டும் என்பது எனது ஆசை. இதுவொரு திருப்புமுனை தொழில் நுட்பமாக இருந்தாலும் எல்லா வகையிலும் ஆக்கப்பூர்வமான பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கிறது.
சிறுமியாக வளரும் பருவத்தில் அப்பாவை எப்படி பார்க்க வேண்டும் என்று கற்பனை செய்தேனோ அதேபோல் இந்த படத்தில் இருக்கிறார். இப்படத்தில் நடிக்க வேண்டும் என ஆரம்பத்தில் தீபிகா படுகோனை சந்தித்து கேட்டபோது முதலில் தயங்கினார். படம் உருவாகும் தொழில்நுட்பம் பற்றி என்னிடம் பல்வேறு கேள்விகள் கேட்டார். குறிப்பாக தன்னுடைய தோற்றம் எப்படி இருக்கும் என்றார். அவரது சந்தேகங்களுக்கு பதில் அளித்தவுடன் நடிக்க ஒப்புக்கெண்டார். அவர் நடித்த காட்சிகள் 48 மணிநேரத்தில் எடுத்து முடிக்கப்பட்டது. இப்படம் அப்பாவின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment