கணவருடன் அனன்யா ரகசிய வாழ்க்கை
திருமண சர்ச்சையால் நடிக்காமல் ஒதுங்கி இருந்த அனன்யா மீண்டும் முழுவேகத்துடன் நடிக்க தொடங்கினார். நாடோடிகள், எங்கேயும் எப்போதும், சீடன் படங்களில் நடித்தவர் அனன்யா. கடந்த ஆண்டில் இவர் திருமண சர்ச்சையில் சிக்கினார். ஆஞ்சனேயா என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அனன்யாவின் குடும்பத்தினர் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை.
ஆனாலும் அவரை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக கூறப்பட்டது. பிரச்னைகளை எதிர்கொண்டதால் சில மாதம் புது படங்கள் ஒப்புக்கொள்ளாமல் இருந்தார். திருமண சர்ச்சை ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழ், மலையாள படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.
ஏற்கனவே இரவும் பகலும், புலிவால் படங்களில் அனன்யா நடிக்கிறார்.
தற்போது மலையாளத்திலிருந்து தமிழில் ரீமேக் ஆகும் காக்டெய்ல் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அனன்யாவின் திருமண சர்ச்சை அடங்கி இருந்தாலும் அவர் ஆஞ்சனேயாவை திருப்பதியில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதுடன் அவருடனே சேர்ந்து ரகசியமாக வாழ்ந்து வருகிறார் என்ற ஒரு தகவலும் உலவிக்கொண்டிருக்கிறது. திருமணம் நடந்தது பற்றி இதுவரை அனன்யா தரப்பிலிருந்து உறுதியான பதில் எதுவும் வரவில்லை.
அந்த சர்ச்சையிலிருந்து மீண்டு நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கி இருப்பதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment