அம்மாவுடன் வந்தும் காதலில் சிக்கிய ஹீரோயின்கள்

No comments
அம்மாவுடன் வந்தும் பல ஹீரோயின்களை காதல் வலையில் வீழ்த்து கின்றனர் ஹீரோக்கள். நடிக்க வரும் புதிதில் மட்டுமல்லாமல் தொடர்ந்து அம்மா அல்லது அப்பாவுடன்தான் பல ஹீரோயின்கள் வருகின்றனர். இதனால் அந்த ஹீரோயின்களுடன் ஹீரோக்கள் லிமிட் தாண்டாமல் பழகுவார்கள் என எண்ணுகின்றனர்.


 த்ரிஷா, ஹன்சிகா, காஜல் போன்ற பெரிய ஹீரோயின்களும் அம்மாக்களுடன்தான் வந்துக்கொண்டிருக்கின்றனர். ஆனாலும் மம்மிக்களின் கண்களுக்கு பொடி தூவிவிட்டு ஹன்சிகாவை காதல் வலையில் சிம்பு சிக்க வைத்தார். காஜல் அகர்வாலும் டோலிவுட் பட தயாரிப்பாளர் ஒருவரின் காதல் வலையில் விழுந்திருப்பதாக கூறப்படுகிறது.

 த்ரிஷாவுடன் நடிகர் ராணா காதல் கிசுகிசுவில் சிக்கினார். பிறகு இருவரும் நண்பர்கள் என்று பேட்டி அளித்ததுடன் சில காலம் ஜோடியாக செல்வதை தவிர்த்தனர். ஆனால் சமீபத்தில் மீண்டும் இவர்கள் ஜோடியாக சுற்ற தொடங்கி இருப்பதாக அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அசின் தனது தந்தையுடன் தான் வருவார். இதனால் அவரிடம் ஹீரோக்கள் அதிகம் நெருங்குவதில்லை. 

பாலிவுட் சென்றபிறகு அங்குள்ள ஹீரோக்களின் ஆதிக்கத்தால் தந்தையை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்துச் செல்வதை அசின் குறைத்துக்கொண்டாராம். ஹீரோக்களுடன் பழகினாலும் அதிகமாக அவர்களிடம் அசின் நெருங்குவதில்லை. இப்போது அவர் கைவசம் படங்கள் இல்லாமல் புதிய பட வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

No comments :

Post a Comment