சிவாஜி விருது விழாவில் கண் கலங்கிய மனோரமா

No comments
உடல் நிலை பாதிப்பால் ஒரு வருடத்துக்கும் மேலாக ஷூட்டிங் செல்லாமல் இருக்கும் மனோரமா, சிவாஜி விருது விழாவில் கண் கலங்கினார். சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிவாஜி பிறந்த நாளில் அவரது பெயரில் நினைவு விருது வழங்கப்படுகிறது. நேற்று சென்னை மியூசிக் அகடாமியில் 85வது பிறந்தநாள் விழா நடந்தது. 

இயக்குனர்கள் முக்தா சீனிவாசன், சி.வி.ராஜேந்திரன், கலைஞானம். நடிகை மனோரமா, பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, வில்லு பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் ஆகியோருக்கு சிவாஜி விருதும், தலா ரூ. 50 ஆயிரம் காசோலையும் வழங்கப்பட்டது. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார் மனோரமா. 

சிங்கம் 2 படத்தில் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவரது வீட்டிலேயே ஒரு சில காட்சிகளை இயக்குனர் ஹரி படமாக்கி அதை படத்தில் இணைத்தார். நடக்க முடியாமல் சிரமப்படுவதால் புதிய படங்கள் எதையும் மனோரமா ஒப்புக்கொள்வதில்லை. சிவாஜி பெயரில் விருது வழங்கப்படுவதாக அறிந்தவுடன் அதை நேரில் வந்து பெற்றுக்கொள்வதாக நடிகர் பிரபுவிடம் தெரிவித்தார்.

 அதன்படி நடக்க முடியாமல் கைதாங்கலாக மேடைக்கு வந்த அவர் சிவாஜி விருது பெற்று கண்கலங்கினார்.

No comments :

Post a Comment