கனவு நாயகனோடு நடிக்க ஆசைப்படும் லட்சுமி மேனன்
தனது கனவு நாயகனுடன் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம் லட்சுமி மேனன். கேரளத்து வரவான இவர் சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் லட்சுமி மேனன்.குடை மிளகாய் மூக்கழகியான இவர் இதனைத் தொடர்ந்து கும்கி, குட்டிப்புலி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் கைவசம் சிப்பாய், பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகர்தாண்டா என நான்கு படங்கள் உள்ளனவாம். இப்போதைக்கு கெளதம் கார்த்திக்தான் லட்சுமி மேனனின் க்ளோஸ் ப்ரெண்ட்டாம்.
அவரது கனவு நாயகனாக சூர்யாவையே சொல்கிறார். காக்க காக்க, கஜினி போன்ற படங்களை பலமுறை பார்த்து ரசித்திருக்கிறாராம். சூர்யாவோடு நடிக்க திகதிகள் கேட்டா, கதையே கேட்காமல் கால்ஷீட் கொடுக்க ரெடி என்கிறார் குடைமிளகாய்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment