குளியல் காட்சியில் நடிக்கிறார் சமந்தா

No comments
ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித், காஜல், ஐஸ்வர்யாராய், அசின், கரீனா என பல்வேறு நட்சத்திரங்கள் குளியல் சோப் விளம்பரத்தில் நடித்திருக்கின்றனர். அந்த நடிகைகள் குளியல் காட்சியில் நடித்ததுபோல் சமந்தாவும் இணைய உள்ளார். 

இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது,'மனம் கவர்ந்த ஹீரோயின்கள் நடிக்கும் இந்த குளியல் சோப் விளம்பரத்தில் நானும் வரவேண்டும் என்பது சிறுவயது கனவு. 

அது நனவாகி இருக்கிறது. அதற்கான ஷூட்டிங் தருணத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்' என குறிப்பிட்டிருக்கிறார். இதற்கிடையில் சித்தார்த்-சமந்தா காதல் மலர்ந்து விரைவில் ஒரு வருடம் முடிவடைய உள்ளது. 

இந்நிலையில் இருவரும் அதை மறந்து, ஒதுங்கி இருப்பதுபோல் சந்திப்புகளை தவிர்த்து வருகின்றனர். ஆனால் திரையுலகினரும், விளம்பர நிறுவனங்களும் அவர்களின் பாப்புலாரிட்டியை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். விரைவில் சித்தார்த்-சமந்தா ஜோடியாக விளம்பர படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.


No comments :

Post a Comment