நடிகர்கள் சம்பளம் மயக்கம் தருகிறது: பாலுமகேந்திரா

No comments
நடிகர் ராஜேஷின் மகன் தீபக், 'பயணங்கள் தொடர்கின்றன' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். அஞ்சனா மேனன் ஹீரோயின். தேஸ்வின் பிரேம் இயக்கம். எம்.ஜி.ஸ்ரீகுமார் தயாரிக்கிறார். 

இதற்கான அறிமுக விழாவில் கலந்துகொண்டு டைரக்டர் பாலுமகேந்திரா பேசியதாவது: மலையாளத்தில் 'நெல்லு' என்ற படம் மூலம் கேமராமேனாக அறிமுகமானேன். பின்னர் 'அழியாத கோலங்கள்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தேன். இன்று வரை தமிழ் படங்களில் பணியாற்றி வருகிறேன். நடிகர் ராஜேஷ் நல்ல கலைஞர். அவரது மகன் தீபக் ஹீரோவாக அறிமுகமாகிறார். 

அவருக்கு ஒரு அட்வைஸ் சொல்ல நினைக்கிறேன். சம்பளம் குறைவாக கிடைக்கிறது என்பதற்காக நல்ல படத்தை வேண்டாம் என்று சொல்லிவிடாதீர்கள். ஏனென்றால் இப்போதெல்லாம் நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை கேட்கும்போது மயக்கம் வந்துவிடும் போலிருக்கிறது.


No comments :

Post a Comment