நான் ரொம்ப சாது : சொல்கிறார் இலியானா

No comments
இந்தி படத்தில் நடித்த கேரக்டரை வெறுக்கிறேன் என்றார் இலியானா. 'இந்தியில் இலியானா நடிக்கும் படம் 'படாஹ் போஸ்டர் நிக்லா ஹீரோ'. ஷாஹித் கபூர் ஹீரோ.

இந்த படத்தில் ஏற்ற வேடத்தை இலியானா வெறுக்கிறாராம். அவரது நிஜ கேரக்டருக்கு எதிர்மறையாக அந்த வேடம் இருப்பதாலேயே வெறுப்புக்கு காரணமாம். இது குறித்து இலியானா கூறுகையில், "இதில் காஜல் என்ற கதாபாத்திரத்தில் நகரத்து பெண்ணாக நடிக்கிறேன்.

இரவு நேர பப் ஆட்டங்களில் கலந்துகொண்டு கும்மாளம் போடுவதுடன், முட்டாள்தனமான வேலைகளிலும் ஈடுபட்டு மற்றவர்களுக்கு தொந்தரவு தருவேன். இதனால்தான் காஜல் கதாபாத்திரம் பிடிக்கவில்லை.

ஏனென்றால் நிஜத்தில் நான் ரொம்ப சாது. படத்தில் நடிக்கும் கதாபாத்திரத்துக்கு நேர் விரோதமாக நிஜத்தில் இருப்பேன்" என்றார் இலியானா.

No comments :

Post a Comment