நாளை முதல் 24ம் தேதி வரை சினிமா படப்பிடிப்புகள் ரத்து
சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி நாளை முதல் 6 நாட்களுக்கு படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகிறது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் சினிமா நூற்றாண்டு விழா வரும் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. 21ம் தேதி மாலை 5.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைக்கிறார்.
24ம் தேதி நிறைவு விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்துகொள்கிறார். தமிழக கவர்னர் ரோசய்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். மேலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.
4 நாட்கள் கோலாகலமாக நடக்க உள்ள இந்நிகழ்ச்சியில் 4 மாநில நடிகர், நடிகைகளும் கலந்துகொள்கின்றனர்.
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனும் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்கிறார். நூற்றாண்டு விழாவையொட்டி நாளை முதல் அனைத்து படப்பிடிப்புகளும் 6 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. வெளிப்புற படப்பிடிப்புகளையும் ரத்துசெய்துவிட்டு நடிகர், நடிகைகள் சென்னை திரும்புகின்றனர்.
24ம் தேதி மட்டும் தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து செய்வது பற்றி திரை அரங்கு உரிமையாளர்கள் இன்று மாலை முடிவு செய்கின்றனர் என்று தியேட்டர் அதிபர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment