நடிகை த்ரிஷா பெயரில் போலி பேஸ்புக் அதிகம்

No comments
நடிகர், நடிகைகளில் த்ரிஷா பெயரில்தான் அதிக எண்ணிக்கையில் போலி இணையதள பக்கங்களை உருவாக்கி உள்ளனர் என்று சைபர் கிரைம் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இணைதள டுவிட்டர். பேஸ்புக் மூலமாக நடிகர், நடிகைகள் ரசிகர்களுடன் தொடர்பு கொள்கின்றனர். த்ரிஷா, சமந்தா, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சிம்பு, தனுஷ் என இளைய நட்சத்திரங்கள் இந்த பக்கங்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

 இதை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு போலியாக நட்சத்திரங்கள் பெயரில் இணையதள பக்கங்கள் தொடங்கி பொய் தகவல்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துகின்றனர். நட்சத்திரங்களின் பெயரில் போலியாக இணையதள பக்கங்கள் தொடங்கியிருப்பது பற்றிய புள்ளிவிவரம் தெரிய வந்திருக்கிறது.

 இவற்றில் த்ரிஷா பெயரில்தான் அதிகபட்சமாக 80 பக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ஆர்யா 63, சூர்யா 62, சமந்தா 55, கமல் 45, ஸ்ருதி 42, ரஜினி 31, தனுஷ் 23 என பட்டியல் நீள்கிறது. ஏற்கனவே இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ஆர்யா, "டுவிட்டர் பேஸ்புக் என எந்த இணைய தள பக்கத்தில் நான் இணைந்திருக்கவில்லை" என்று கூறி இருக்கிறார். 

த்ரிஷா கூறும்போது, ‘எனது ரசிகர்களுக்கு என் பெயரிலான உண்மையான இணையதள பக்கம் எது என்பது தெரியும். போலியாக பயன்படுத்துபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.No comments :

Post a Comment