உலக நாயகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

No comments

உலக நாயகன் கமல் ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார். மும்பையில் நடைபெறவுள்ள 15ஆவது 'மும்பை விருது விழா'வின் போதே இந்த விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. மும்பை எகெடமி ஆப் மூவிங் இமேஜ் (எம்.ஏ.எம்.ஐ) வருடா வருடம் நடத்தி வரும் மும்பை விருது விழா, 15ஆவது முறையாக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ளது.

 8 நாட்கள் நடைபெறவுள்ள இந்த விழாவின் போது 65 நாடுகளைச் சேர்ந்த 200 திரைப்படங்கள் திரையிட்டுக் காட்டப்படவுள்ளன. கமல் ஹாசன் ஒரு சிறந்த கலைஞன். அவருக்குள் திரைக்கதை, இயக்கம், பாடும் திறன், கவித்துவம் மற்றும் நடிப்பு என ஏராளமான திறமைகள் காணப்படுகின்றன. அவரது திறமைகளைக் கௌரவித்து அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்க தீர்மானித்துள்ளோம் என்று எம்.ஏ.எம்.ஐ.யின் தலைவர் ஷியாம் பெனகல் தெரிவித்துள்ளார்.


 கமல் ஹாசன் தனது திரை வாழ்க்கையின் 50 வருடத்தை அண்மையில் பூர்த்தி செய்தார். இதுவரையில் அவர் 190க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய திரைப்படங்களாக மூன்றாம் பிறை, நாயகன், புஷ்பக விமான, அப்பு ராஜா மற்றும் ஹேராம் போன்றவற்றைக் கூறலாம்.



No comments :

Post a Comment