காமெடி நடிப்பு என் பலம் : சிவகார்த்திகேயன்

No comments
‘காமெடி நடிப்புதான் என் பலம்’ என்று சிவகார்த்திகேயன் சொன்னார். அவர் மேலும் கூறியதாவது: ‘எதிர்நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படங்கள் ஹிட்டானதில் மகிழ்ச்சி. ‘மான் கராத்தே’ படம் முடிந்ததும், மீண்டும் ‘எதிர்நீச்சல்’ குழுவினருடன் பணியாற்ற உள்ளேன்.

 தனுஷ் தயாரிக்கும் அந்தப் படத்தை துரை. செந்தில்குமார் இயக்குகிறார். பிறகு பொன்ராம் மீண்டும் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். தமிழில் எனக்கு நல்ல இடம் கிடைத்துள்ளது. அதை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம். என்னைப் பற்றி வரும் விமர்சனங்களை கவனத்துடன் எதிர்கொள்கிறேன்.

 ஆக்ஷன் ஹீரோவாக மாறுவீர்களா என்று கேட்கிறார்கள். காமெடி நடிப்புதான் என் பலம். அதை கைவிட மாட்டேன். என் சம்பளத்தை 5 கோடி ரூபாய் வரை உயர்த்தி விட்டதாகச் சொல்கிறார்கள். இதை கேட்கும்போதே சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், உண்மையில் அவ்வளவு சம்பளம் கேட்கவில்லை. டைரக்டர்கள் விரும்பும் நடிகனாகவும், ரசிகர்களுக்குப் பிடித்த ஹீரோவாகவும் இருக்க ஆசைப்படுகிறேன்.


No comments :

Post a Comment