காதல் திருமணம்தான்: பிரியாமணி தடாலடி

No comments
காதல் திருமணம்தான் செய்வேன் என்கிறார் பிரியாமணி. இதுபற்றி அவர் கூறியதாவது: ‘ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் மட்டுமே நடிப்பது என முடிவு செய்திருக்கிறீர்களா?’ என கேட்கிறார்கள். அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை. பெரிய ஹீரோக்கள், பெரிய நிறுவனங்களின் மசாலா படங்களில் நடித்திருக்கிறேன். 

என்னை பொறுத்தவரை ஸ்கிரிப்ட்டுக்கு முக்கியத்துவம் தருகிறேன். அப்படி தேர்வு செய்யும்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் நன்றாக இருந்ததால் ஏற்றேன். ஒரே பாணி கதையில்தான் நடிப்பேன் என்று முத்திரை விழாமல் இருக்க மசாலா படங்களிலும் நடிப்பேன். திருமணம் பற்றி இப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை. 

ஆனால் காதல் திருமணமா, வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பதா என்பதை மட்டும் தீர்மானித்துவிட்டேன். முன்பின் தெரியாத ஒருவரை மணந்துகொண்டு என்னால் வாழ்க்கை நடத்த முடியாது. எனது எதிர்கால வாழ்க்கையை அப்படி கழிப்பது என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. முதலில் எனக்கேற்ற நபர் கிடைக்கட்டும். அதன்பிறகு திருமணம் பற்றி முடிவு செய்கிறேன்

. முதலிலேயே முடிவை எடுத்துவிட்டு பிறகு வருத்தப்பட நான் தயாரில்லை. திருமணம் என்பது பெரிய விஷயம். அதை எளிதில் தீர்மானிக்க முடியாது.


No comments :

Post a Comment