நடிகை அஞ்சலிக்கு வாரன்ட்: 3ம் திகதி தள்ளி வைப்பு!

No comments
நடிகை அஞ்சலிக்கு பிணையில் வெளிவராத பிடிவாரண்டை பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.
பூமணி, பூந்தோட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் களஞ்சியம்.

இவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நடிகை அஞ்சலியை சத்தமின்றி முத்தமிடு என்ற படத்தில் அறிமுகம்செய்தேன்.

முதல் பட இயக்குனர் என்பதால் அஞ்சலி குடும்பத்துடன் எனக்கு பழக்கம் இருந்தது.

குடும்ப நண்பர் என்ற முறையில் ஆலோசனைகளை சொல்லி இருக்கிறேன். மற்றபடி அவரது குடும்ப பிரச்னைகளிலோ, அஞ்சலியின் சொந்த பிரச்னையிலோ தலையிட்டது இல்லை.

ஆனால் பணத்தை அபகரித்ததாகவும் என்னால் உயிருக்கு ஆபத்து என்றும் என்மீது அவதூறான குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

இது என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்ற மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு 17வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ராஜலட்சுமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆனால் அஞ்சலி ஆஜராகவில்லை.

அவரது சார்பில் ஆஜராக விலக்கு அளிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஏற்காத மாஜிஸ்திரேட் நடிகை அஞ்சலிக்கு வாரன்ட் பிறப்பித்து விசாரணையை அக்டோபர் 3ம் திகதிக்கு தள்ளி வைத்துள்ளார்.


No comments :

Post a Comment