கவுதம் கார்த்திக்கின் பிறந்த நாள் அன்று தொடக்கி வைக்கப்பட்ட வை ராஜா வை

No comments
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும், சூப்பர் ஆக்டர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா 3 படத்துக்கு பிறகு அடுத்து டைரக்ட் செய்யப்போகும் படம் வை ராஜா வை. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. 

கவுதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடிக்கிறார்கள். வேல்ராஜ் கேமரா. யுவன் இசை. நேற்று (செப்படம்ர் 12) கவுதம் கார்த்திக்கின் பிறந்த நாள். இதையொட்டி படத்தின் துவக்க விழா ஏஜிஎஸ் அலுவலகத்தில் நடந்தது. விழாவில் டைரக்டர்கள் பாலா, வெற்றிமாறன், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 ஹீரோ, ஹீரோயின் இருவரும் காதல் மொழி பேசும் காட்சியுடன் நேற்று படப்பிடிப்பு தொடங்கியது. வந்திருந்தவர்களை தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் வரவேற்றார். “இது ஜாலியான காமெடி ரொமாண்டிக் படம். காதலும், காமெடியும் பிப்டி பிப்டி பிரசண்ட் இருக்கும்” என்கிறார் டைரக்டர் ஐஸ்வர்யா.

No comments :

Post a Comment