நடன ஒத்திகையின் போது தவறி விழுந்த நடிகர் லாரன்சுக்கு பலத்த அடி

No comments
காஞ்சனா வெற்றிக்கு பிறகு லாரன்ஸ் நடித்து இயக்கும் படம் “முனி -3 கங்கா” இந்த படத்தின் பாடல் காட்சி ஒத்திகையின் போது லாரன்ஸ் தடுமாறி கிழே விழுந்தார் அதனால் அவரது கழுத்து மற்றும் கைகளின் மணிகட்டுகளில் பலத்த அடிபட்டது. அவர் உடனடியாக ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார். 

இருபது நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார் லாரன்ஸ். டாக்டர்கள் அவருக்கு வீட்டிலேயே பிஸியோதெரபி சிகிச்சை அளித்து வருகின்றனர். பலத்த அடி பட்டதால் மூன்று மாதங்கள் ஓய்வும், சிகிச்சையும் தேவை என்று டாக்டர்கள் அறிவுரை சொன்னதால் ஓய்வுக்கு பிறகு டிசம்பர் மாதம் “முனி – 3 கங்கா” படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார். 

அதுபற்றி லாரன்ஸ் கூறியது….

 படத்தின் முதல்பாதி முடிந்து விட்டது. இரண்டாம் பாதியில் ரிஸ்க்கான காட்சிகள் அதிகம் இருப்பதால் முழு சிகிச்சைக்குப் பிறகு படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். டாக்டர்கள் முழு ஆதரவுடனும் நான் வணங்கும் எல்லா வல்ல இறைவன் ஸ்ரீ ராகவேந்திரர் மகிமையாலும் விரைவில் குணமடைந்து விடுவேன் என்கிறார் லாரன்ஸ்.

No comments :

Post a Comment