இலங்கை அகதிகளின் கடல் பயண கதை

No comments
நியூ எம்பயர் செல்லுலாயிட்ஸ் சார்பில் லட்சுமிகாந்த் தயாரித்துள்ள படம் ‘ராவண தேசம்’. அஜெய் என்பவர் இயக்கி நடிக்கிறார். 

ஜெனிபர் ஜோடி. வி.கே.ராம்ராஜ் ஒளிப்பதிவு. ஆர்.சிவன் இசை. இதன் பாடல்களை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் வெளியிட, கலைராஜன் எம்.எல்.ஏ பெற்றார். தயாரிப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், ஜெகதீஸ்வரரெட்டி, ரமேஷ்பாபு, பிரமிட் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

 படம் பற்றி இயக்குனர் அஜெய் கூறியதாவது: போர் காலத்தில் ஈழத்திலிருந்து அப்பாவி மக்கள் படகுகளிலும் சிறு கப்பல்களிலும் வெளிநாட்டுக்கு அகதிகளாக தப்பி ஓடினார்கள். 

அதில் நடுக்கடலில் ஜலசமாதி ஆனவர்கள் அதிகம். அப்படிப்பட்ட ஒரு கொடிய பயணத்தை மையமாக கொண்ட படம் இது. யதார்த்தமாக பதிவு செய்துள்ளோம். 90 நாட்கள் கடலில் படப்பிடிப்பு நடத்தி உள்ளோம்.

No comments :

Post a Comment