ஸ்ருதியை நினைத்து சரிகா கவலை

No comments
ஸ்ருதியை நினைத்து சரிகா கவலை அடைந்தார். கமலை விட்டு பிரிந்த சரிகா மும்பையில் வசிக்கிறார். அவருடன் இளைய மகள் அக்ஷரா தங்கி இருப்பதுடன் நடிப்பு மற்றும் இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார். 

மூத்த மகள் ஸ்ருதி மும்பையில் தனியாக வீடு எடுத்து தங்கியிருப்பதுடன் கைநிறைய படங்களை ஒப்புக்கொண்டு ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். இந்தி மற்றும் தென்னிந்திய மொழிப் படங்கள் என மாறி மாறி நடிக்கும் ஸ்ருதி இடைவிடாமல் ஊர் ஊராக பறந்த வண்ணம் இருக்கிறார்.

 தவிர அவர் நடித்து அடுத்தடுத்து சமீபத்தில் திரைக்கு வந்த டி டே, ரமய்யா வஸ்தாவய்யா ஆகிய படங்களின் புரமோஷனுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஸ்ருதி பிஸியாக இருப்பதை எண்ணி ஒருபுறம் சரிகா சந்தோஷம் அடைந்தாலும் மறுபுறம் ஓய்வில்லாமல் அவர் உழைப்பதால் உடல்நிலை பாதிக்குமே என்று கவலை அடைந்திருக்கிறார். 

இது பற்றி ஸ்ருதியிடம் பேசிய சரிகா, உன்னை நீயே வருத்திக்கொள்ளும் அளவுக்கு படங்களை ஒப்புக்கொண்டு ஓய்வே எடுக்காமல் இருக்கிறாய். குறைந்த பட்சம் 10 நாட்களாவது ஓய்வு எடு என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் ஸ்ருதியோ 2 நாட்கள் கூட ஓய்வு எடுக்க இயலாத நிலையில் இருப்பதாக சொன்னாராம்.

No comments :

Post a Comment