நோ பஞ்ச் டயலாக்: விஜய்
பஞ்ச் வசனங்களே வேண்டாம் என்கிறாராம் இளைய தளபதி விஜய்.
தற்போது வருகிற தமிழ் சினிமாக்களில் ஹீரோக்கள் அறிமுகம் என்றாலே பஞ்ச் டயலாக்கும் சேர்ந்துதான் வருகிறது.
முன்னணி ஹீரோக்கள் மட்டுமின்றி, வளரும் மற்றும் வளராத ஹீரோக்கள் கூட பஞ்ச் வசனங்களை பேச ஆரம்பித்துள்ளனர்.
தற்போது அந்த பஞ்ச் டயலாக்கே வேண்டாம் என்கிறாராம் விஜய்.
கடைசியாக அவர் நடித்த தலைவா படத்தில் பஞ்ச் வசனம் எதுவும் இல்லை.
அடுத்து அவர் நடித்து வெளியாக உள்ள ஜில்லா படத்திலும் அதுபோன்ற எந்த டயலாகும் கிடையாதாம்.
அதேபோல் இனி தனது படங்களில் ஹீரோயிச ஓவர் பில்டப் காட்சிகளுக்கும் தடை போட்டிருக்கிறாராம் விஜய்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment