ஹீரோக்களுக்கு பொறுப்பு வேண்டும் : விஷால் விளாசல்

No comments
ஒரு படத்தை ரிலீஸ் செய்வதில் ஹீரோவுக்கும் பொறுப்பு இருக்கிறது என்று நடிகர் விஷால் கூறினார். ‘வெண்ணிலா கபடி குழு’ டைரக்டர் சுசீந்திரன் இயக்கும் படம் ‘பாண்டிய நாடு’. இந்த படத்தை விஷால் நடித்து தயாரித்திருக்கிறார். 


அவர் கூறியதாவது: ‘நீங்கள் ஏன் ‘மதகஜ ராஜா’ படத்தை ரிலீஸ் செய்ய பொறுப்பேற்றீர்கள்’ என்று என்னிடம் கேட்கிறார்கள். அந்த படத்திற்கு பைனான்ஸ் பிரச்னை ஏற்பட்டது. எப்பவோ அந்த படம் ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும். இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அதனால்தான், நானே அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்தேன். 

படத்தை ரிலீஸ் செய்வதில் ஒரு ஹீரோவுக்கும் முக்கிய பொறுப்பு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். சினிமாவில் கிடைத்த அனுபவம்தான் என்னை தயாரிப்பாளர் ஆக்கி இருக்கிறது. பாண்டியநாடு படத்தை தயாரித்து ஹீரோவாக நடிக்கிறேன். இது எனக்கு மிக முக்கியமான படம். இயக்குனர் சுசீந்திரனுக்கும் எனக்கும் ஏற்பட்ட புரிதலில் இப்படம் நன்றாக வந்திருக்கிறது. மீண்டும் இருவரும் சேர்ந்து ஒரு படம் உருவாக்குவோம். ‘சண்ட கோழி’ படம் ஹிட்டாக அமைந்தது.

 அதுபோல் ஒரு மேஜிக் இப்படத்திலும் நிகழும். இதில் இயக்குனர் பாரதிராஜாவும், சூரியும் முக்கிய வேடம் ஏற்றிருக்கின்றனர். லட்சுமி மேனன் ஹீரோயின். இதன் பாடல்கள் வரவேற்பை பெற்றிருக்கிறது. வெற்றி, தோல்வி இரண்டுமே ஹீரோக் களை ஆட்டுவிக்கும். அதற்கு அடிமையாகாமல் நம்பிக்கையுடன் பொறுமை கடைபிடித்தல் அவசியம் என்று எங்க அப்பா சொல்வார். அதை நான் அப்படியே பின்பற்றுகிறேன்.

No comments :

Post a Comment