ஹீரோக்கள் சிகரெட் பிடிக்க இயக்குனர் திடீர் எதிர்ப்பு

No comments
சினிமாவில் பெரும்பாலும் ஹீரோக்கள் ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இல்லாமல் போகாது. ஆனால், ஹீரோ சிகரெட் புகைக்கும் காட்சிகளே இனி வைக்க மாட்டேன் என்கிறார் இயக்குனர் ராஜேஷ். ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களை இயக்கியவர் ராஜேஷ். அடுத்ததாக, கார்த்தி, காஜல் அகர்வால் நடிக்கும் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா‘ படத்தை இயக்கி இருக்கிறார். ‘உங்கள் படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளை வைக்காதீர்கள்’ என்று தணிக்கை குழுவினர் அவரிடம் கேட்டுக்கொண்டார்கள்.

 இதை ஏற்று, அக்காட்சிளை தனது படங்களில் புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறார் இயக்குனர் ராஜேஷ். இதுபற்றி அவர் கூறியதாவது: என் படங்களில் சிகரெட் புகைக்கும் காட்சிகளை வைக்கக் கூடாது என்று நான் முடிவெடுத்திருக்கிறேன். எனது படங்கள் சென்சார் செய்வதற்காக போகும்போதெல்லாம், ‘சிகரெட் புகைக்கும் காட்சியை படத்தில் வைப்பதன் மூலம் இளைஞர்களை அந்த கெட்ட பழக்கத்துக்கு தூண்டுவதுபோல் உள்ளது’ என்று கூறினர்.

 சிகரெட் புகைத்தால் ஆபத்து என்ற எழுத்துக்களை அக்காட்சியின்போது திரையில் இடம்பெறச் செய்வதை விட அப்படிப்பட்ட காட்சிகளை முற்றிலும் வைக்காமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் நல்ல மாற்றத்தை உருவாக்கும் என சென்சார் அதிகாரிகள் கூறுகின்றனர்.

 ஹீரோக்கள் சிகரெட் புகைக்காமல் இருப்பதை கண்டு அவரது ரசிகர்கள் அந்த பழக்கத்தை கைவிட்டால் நான் திருப்தி அடைவேன். ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் கார்த்தி சிகரெட் பிடிக்கும் காட்சிகளே கிடையாது.

No comments :

Post a Comment