பேருந்து நிலையங்களில் ‘ஜன்னல் ஓரம்’ படத்தின் இசை வெளியீடு
கரு.பழனியப்பன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘ஜன்னல் ஓரம்’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, நாளை சென்னை மாநகரம் முழுவதும் நடத்தப்பட உள்ளது. இந்தப் படத்தில் பார்த்திபன், விமல், விதார்த், ரமணா, பூர்ணா, மனிஷா, சிங்கம் புலி, ராஜேஷ் ஆகியோர் ஒரு சிறப்புப் பேருந்தில் சென்னையை வலம் வந்து இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இவர்களுடன் படத்தின் இயக்குனர் கரு.பழனியப்பன், இசை அமைப்பாளர் வித்யா சாகர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களுடன் செல்லும் பேருந்து, காலை 8 மணிக்கு வடபழனி பேருந்து நிலையத்தில் இசை கொண்டாட்டத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து கிண்டி, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், கோயம்பேடு பஸ் நிலையங்களில் பொதுமக்கள் முன்னிலையில் ‘ஜன்னல் ஓரம்’ படப் பாடல்கள் வெளியிடப்படுகிறது.
இறுதியாக மாலை 6 மணிக்கு வடபழனியிலுள்ள கமலா திரையரங்கில் நடைபெறும் விழாவில் திரையுலக பிரமுகர்கள் முன்னிலையில் நடிகர் சூர்யா படத்தின் டிரெய்லரையும், பாடல் காட்சிகளையும் வெளியிட இருக்கிறார். இந்தப் படம் மலையாள ‘ஆர்டினரி’ திரைப்படத்தின் ரீ-மேக் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment