இயக்குனர்களுக்கு வலை வீசும் இஷா
பட வாய்ப்பு கேட்டு கோலிவுட் இயக்குனர்களுக்கு வலை வீசுகிறார் இஷா கோபிகர். 1990களில் வெளியான காதல் கவிதை, என் சுவாச காற்றே, ஜோடி, நெஞ்சினிலே, நரசிம்மா படங்களில் நடித்தவர் இஷா கோபிகர். ஹீரோயினாக நடித்தும் இவரால் தமிழில் தாக்கு பிடிக்க முடியவில்லை. பிறகு பாலிவுட்டுக்கு சென்றார். அங்கும் கடும் போட்டி இருந்ததால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை.
இதையடுத்து திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கினார். டி.வி. நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். அங்கும் வாய்ப்புகள் கை நழுவியதால் வீட்டில் முடங்கினார்.
இந்நிலையில் முன்னாள் ஹீரோயின்கள் அக்கா, அம்மா வேடங்களில் நடிக்க வருவதையறிந்து இஷாவுக்கு ஆசை தொற்றி கொண்டது. மீண்டும் சினிமா வாய்ப்புக்காக வலை வீசினார்.
தென்னிந்திய படங்களில் அவருக்கு ஒர்க் அவுட் ஆகி உள்ளது. கன்னடத்தில் நிஜ கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் லூட்டி என்ற படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இதே பாணியில் கோலிவுட், டோலிவுட் இயக்குனர்களிடம் இஷா கோபிகர் தொடர்பு கொண்டு வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment