பாலாவின் பரதேசி படத்திற்கு லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் கிடைத்த 2 விருதுகள் (Photos)

No comments
லண்டனில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. அமெரிக்கா, ரஷ்யா, தென் கொரியா, சிலி மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த பல்வேறு நாடுகளில் இருந்தும் பல படங்கள் பங்கேற்றன. 

 இந்தியாவில் இருந்து பாலா இயக்கிய பரதேசி படம் பங்கேற்க தேர்வானது. சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த வெளிநாட்டு இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை, சிறந்த ஆடை வடிவமைப்பு ஆகிய 8 விருதுகளுக்கு பரதேசி படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.  

இதில், லண்டன் திரைப்பட விழாவில் 2 விருதுகளை பரதேசி படம் பெற்றுள்ளது. சிறந்த ஒளிப்பதிவாளர் பிரிவில் செழியனும், சிறந்த உடையலங்கார நிபுணர் பிரிவில் பூர்ணிமா ராமசாமியும் விருது பெறுவதற்கு தேர்வாகியுள்ளனர்.

 இந்த தகவல் லண்டன் சர்வதேச திரைப்பட விழாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment