காஜல் தங்கச்சிக்கு கல்யாணமாம்
காஜல் அகர்வாலின் தங்கையான நிஷா அகர்வாலுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
தமிழில் இஷ்டம் படத்தின் மூலம் விமலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நிஷா அகர்வால்.
ஆனால் இப்படம் சரியான வரவேற்பை கொடுக்கவில்லை.
அதேசமயம் தெலுங்கில் அறிமுகமான இவர், அங்கு யெமன்டி இ வேல அவந்திகா, சோலோ, சுகுமாருடு, சரதக அம்மாயிதோ போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை, தெலுங்கில் டிகே போஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல தொழிலதிபரான கரன் வௌச்சா என்பவரை மணக்கவுள்ளார் நிஷா.
இவர்களது திருமணம் மும்பையில் டிசம்பர் 28ம் திகதி நடைபெறவுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment