தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகவுள்ளார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான்

No comments
தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகவுள்ளார் மலையாள மெகாஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். கடந்த ஆண்டு சித்தார்த், அமலாபால் நடித்து வெளிவந்த படம் காதலில் சொதப்புவது எப்படி?. 

இப்படத்தை பாலாஜி மோகன் இயக்கியிருந்தார். குறும்பட இயக்குனரான பாலாஜி மோகன் தனது முதல் படத்திலேயே திறமையான இயக்குனர் என பெயரெடுத்தார். 

 இந்நிலையில் பாலாஜி மோகன் தமிழில் புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். அதில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானை அறிமுகப்படுத்துகிறார். 

 மலையாளம் மற்றும் தெலுங்கில் பிரபல ஹீரோவான துல்கர் இப்படம் மூலம் தமிழுக்கும் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக நஸ்ரியா நசீம் நடிக்கிறார். மேலும் இப்படத்திற்கு ‘கொலவெறி’ புகழ் அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பினை விரைவில் தொடங்க முடிவு செய்துள்ளனர்.

No comments :

Post a Comment