மல்லிகாவை தரக்குறைவாக ரசிகர் திட்டியதால் பரபரப்பு

No comments
காதலனை தேர்ந்தெடுக்கும் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற மல்லிகாவை தரக்குறைவாக ரசிகர் திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. ‘தசாவதாரம்‘, ‘ஒஸ்தி‘ போன்ற படங்களில் நடித்திருப்பவர் பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத். 

இவர் அமெரிக்க டி.வி. சேனல் நடத்தும் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ளார். தனக்கு பிடித்த காதலனை நேரில் சந்தித்து அவரை தேர்வு செய்வதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். இதில் பங்கேற்ற ரசிகர் ஒருவர் மல்லிகா ஷெராவத்துடன் வாக்குவாதம் செய்தார். 

பிறகு தரக்குறைவான வார்த்தைகளால் அவரை திட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. வேதனை அடைந்த மல்லிகா கண்கலங்கினார். பாலிவுட் பிரபலம் மகேஷ்பட் பார்வையாளராக பங்கேற்றிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. 

இதையடுத்து மல்லிகா நிகழ்ச்சியிலிருந்து திடீரென்று வெளியேறினார். அவரை சமாதானப்படுத்தி நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அழைத்தபோது மீண்டும் ஷூட்டிங்கில் பங்கேற்க மாட்டேன் என்று கூறினார். 

இதையடுத்து 3 நாட்கள் ஷூட்டிங் நடக்கவில்லை. பிறகு நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் நேரடியாக மல்லிகாவிடம் சமாதானம் பேசியபிறகே ஷூட்டிங்கில் பங்கேற்க ஒப்புக்கொண்டார்.

No comments :

Post a Comment