ஆடியோ விழாவில் வெட்கத்தைவிட்டு வாய்ப்பு கேட்ட ஹீரோ
ஆடியோ விழாவில் பங்கேற்க வந்த இயக்குனர் பாலாவிடம் பகிரங்கமாக வாய்ப்பு கேட்டார் வினய். ஜீவா, வினய், த்ரிஷா, ஆண்ட்ரியா, சந்தானம் நடிக்கும் படம் ‘என்றென்றும் புன்னகை‘ வி.ராமதாஸ், தமிழ்க்குமரன் தயாரிக்கின்றனர். இப்படத்தை ஐ.அகமத் இயக்குகிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். இதன் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. கமல்ஹாசன் வெளியிட டைரக்டர் பாலா பெற்றுக்கொண்டார். விழாவில் நடிகர் வினய் பேசியதாவது, ‘கமல்சாரை பார்த்துதான் நடிக்க வந்தேன். அவரை முதலில் பார்த்தபோது நடுக்கமாக இருந்தது.
எனக்கு அவர் வாழ்த்து சொன்னார். பதில் பேச முடியாமல் தடுமாறிய நான் நன்றி சொல்வதற்கு பதில் அவருக்கு வாழ்த்து சொன்னேன். டைரக்டர் பாலா தனது படங்களில் ஹீரோக்களை தேர்வு செய்யும்போது ஒரு சிலர் மட்டுமே தேர்வாகிறார்கள். அவரது படத்தில் நடிக்க எனக்கு ஆசை.
இந்த மேடையில் வெட்கத்தைவிட்டுகேட்கிறேன். உங்கள் படத்தில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்‘ என்றார். விழாவில் நடிகர்கள் ஜீவா, பார்த்திபன், உதயநிதி ஸ்டாலின், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் டி.சிவா, ஞானவேல்ராஜா, நடிகைகள் த்ரிஷா, ஆண்ட்ரியா பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment