ஹீரோ வேடம் கிடைக்காததால் வில்லன் வேடத்தில் அஜீத் மைத்துனர்

No comments
கோலிவுட்டில் ஹீரோக்கள் வில்லனாக மாறும் நேரம் போலிருக்கிறது. சமீபத்தில்தான் லவ் ஸ்டோரி என்ற படத்தில் அப்பாஸ் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். அவரைத் தொடர்ந்து காதல் வைரஸ், யுகா, கிரிவலம் படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் அஜீத்தின் மைத்துனர் ரிச்சர்ட் சுற்றுலா என்ற படம் மூலம் வில்லனாக மாறி இருக்கிறார். 

இதுபற்றி அப்பட இயக்குனர் வி.ராஜேஷ் ஆல்பிரட் கூறும்போது,‘நண்பர்களின் உதவியுடன் திருமணம் செய்வதற்காக காதல் ஜோடி ஊட்டி வருகிறது. பதிவு திருமணம் செய்யும் நாளன்று நண்பர்கள் மர்மமான முறையில் காணாமல் போகிறார்கள். இதைக்கண்டு காதலர்கள் அதிர்ச்சியில் உறைகின்றனர். 

அடுத்து நடப்பது என்ன என்பது கதை. இதில் வில்லன் வேடத்தில் ரிச்சர்ட் நடிக்கிறார். மிதுன், ஸ்ரீஜி காதல் ஜோடியாக நடிக்கின்றனர். பிரஜன், சன்ட்ரா, அங்கிதா, ஜெகன், சிங்கமுத்து ஆகியோரும் நடிக்கின்றனர். பரணி இசை. ஜெயக்குமார், ரவிகுமார், வெங்கட்ராமன் தயாரிப்பு என்றார்.

No comments :

Post a Comment