நெட்டில் லீக் ஆன படத்தில் நடிக்க விஜய் விருப்பம்

No comments
இணையதளத்தில் லீக் ஆன டோலிவுட் படத்தின் ரீமேக்கில் நடிக்க விஜய் விருப்பம் தெரிவித்திருக்கிறார். டோலிவுட்டில் பவன் கல்யாண், சமந்தா நடித்துள்ள படம் அட்டரின்டிக்கி தரேடி. இப்படம் ரிலீசுக்கு முன்பே இணையதளத்தில் லீக் ஆனது. இதனால் பவன், சமந்தா உள்ளிட்ட பட குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். 


ஆனால் இப்படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே தெலுங்கில் உருவான பல படங்களின் தமிழ் ரீமேக்கில் விஜய் நடித்திருக்கிறார். அப்படி நடித்த போக்கிரி, கில்லி உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றது. அதேபோல் தற்போது ஹிட்டாகி உள்ள பவன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார். 

 இது பற்றி பட தயாரிப்பாளர் பிரசாத் கூறும்போது, அட்டரின்டிக்கி தரேடி படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளேன். இதற்கு பல்வேறு தயாரிப்பாளர்கள் என்னிடம் விருப்பம் தெரிவித்து பேசி வருகிறார்கள். தமிழில் நடிப்பதற்கு விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை. பேச்சுவார்த்தை நிலையில்தான் இது உள்ளது என்றார்.

No comments :

Post a Comment