பூனம் கவுருக்கு 400 வித காஸ்டியூம்
விஜயசேகரன் எழுதி இயக்கும் படம் ரணம். இதில் ஷரத், சுவாசிகா, சங்கிலி முருகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு ஹர்சன், பூனம் கவுர் நடிக்கின்றனர்.
இது பற்றி இயக்குனர் கூறும்போது, எங்கடா போனே ரோமியோ.. என்னடா ஆனே ரோமியோ என்ற பாடல் காட்சிக்கு ஹர்சன், பூனம் கவுர் நடனம் ஆடினர். இந்த ஜோடிக்கு மொத்தம் 400 விதமான காஸ்டியூம் பயன்படுத்தப்பட்டது.
ஒரு பாடல் காட்சிக்கு இவ்வளவு காஸ்டியூம் பயன்படுத்துவது இதுதான் முதல் முறை. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதியில் ஷூட்டிங் நடந்தது. பாலா ஒளிப்பதிவு செய்தார். மரியா மனோகர் இசை அமைத்திருக்கிறார் என்றார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment