மணிரத்னம் படத்தில் நடிக்க விரும்பாத வாரிசு
கடல் படம் மூலம் கார்த்திக் மகன் கவுதமை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் இயக்குனர் மணிரத்னம். இதையடுத்து புதிய படம் இயக்குவதுபற்றிய ஆலோசனையில் இருக்கிறார். மல்லுவுட் ஹீரோ மோகன்லால் மகன் பிரணவ்வை தனது இயக்கத்தில் மணிரத்னம் அறிமுகப்படுத்த உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது.
இது குறித்து மோகன்லால், பிரணவ்வின் நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்தபோது, மணிரத்னம் படத்தில் பிரணவ்வை ஹீரோவாக அறிமுகம் செய்து வைப்பது பற்றி எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்றனர். அதே சமயம், மணிரத்னம் தற்போது ஃபாமில் இல்லாததால் அவரது படத்தில் அறிமுகமாகும் எண்ணமும் தனக்கு இல்லை என நெருக்கமான சென்னை நண்பர்களிடம் கூறியிருக்கிறார் பிரணவ்.
மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் ஹீரோவாகிவிட்டார். அவருக்கு போட்டியாக மகன் பிரணவ்வை முன்னணி இயக்குனரின் படத்தில் நடிக்க வைக்க மோகன்லால் தயாராகி வருகிறார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment