அஜீத் நடித்ததால் எனக்கு வாய்ப்பு பறிபோனது : ஜெய் புது தகவல்

No comments
எனது கேரக்டரில் அஜீத் நடித்ததால், மங்காத்தா படத்தில் நான் நடிக்கவில்லை என்றார் ஜெய். அவர் கூறியதாவது: சுப்பிரமணியபுரம் படத்துக்கு பிறகு தவறான சில படங்களை தேர்வு செய்துவிட்டேன். அதை உணர்ந்த பிறகு நல்ல ஸ்கிரிப்ட்டுக்காக காத்திருந்தேன். 

மவுனராகம் படத்தில் கார்த் திக் நடித்ததுபோன்ற துறுதுறுவென ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க காத்திருந்தேன். ராஜா ராணி படத்தில் அதுபோல் கேரக்டர் கிடைக்கவே உடனே ஒப்புக்கொண்டேன். ‘நஸ்ரியாவுடன் என்ன உறவு? என கேட்கிறார்கள். நட்புதான் வேறொன்றுமில்லை. என்னைப் பொறுத்தவரை காதல் திருமணம் செய்யத்தான் எண்ணி உள்ளேன். 

ஆனால் இன்னும் காதலி கிடைக்கவில்லை. வெங்கட்பிரபு படத்தில் மீண்டும் நடிக்காதது ஏன்? என்கிறார்கள். மங்காத்தா படத்தில் அஜீத் நடிப்பதற்கு முன் நான்தான் அந்த கேரக்டரில் நடிப்பதாக இருந்தது. அவர் நடிக்க ஓகே சொன்னவுடன் அப்படத்தில் நான் இல்லை. 
'
அதில் இடம்பெற்ற போலீஸ் வேடமாவது தரும்படி வெங்கட்பிரபுவிடம் கேட்டபோது, இதெல்லாம் உனக்கே ஓவராக தெரியலயா? என்று கேட்டு மறுத்துவிட்டார். அவருடன் எனக்கு சண்டை எதுவும் இல்லை. அப்படி சொன்னால் என்னை நேரில் வந்து அடிப்பார்.

No comments :

Post a Comment