சன் சிங்கரில் விசாகா சிங்

No comments
சன் டிவி.யில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, சன் சிங்கர். குழந்தைகள் பங்குபெறும் இந்நிகழ்ச்சியில் கங்கை அமரன், அனுராதா ஸ்ரீராம், புஷ்பவனம் குப்புசாமி ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.

 இதில் சிறப்பு விருந்தினராக நடிகை விசாகா சிங் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி, வரும் வாரம் ஒளிப்பரப்பாகிறது. இதுபற்றி விசாகா கூறும்போது, ‘இளம் குழந்தைகள் பாடுவதை கேட்கும் போது பெருமையாக இருக்கிறது. ஒவ்வொருவரும் சிறப்பாக பாடினார்கள்.

 எனக்கு தமிழ் புரியவில்லை என்றாலும் இசைக்கு மொழி தேவையில்லையே. நிகழ்ச்சி முடிந்ததும் குழந்தைகளுடன் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் வரும், ‘மாமா உன்னத்தான்’ பாடலுக்கு நடனம் ஆடினேன். புதுமையாக இருந்தது’ என்றார்.

No comments :

Post a Comment