அல்டிமேட் காமெடிதான் என் பலம்: கருணாஸ்
கருணாஸ் தயாரித்து, ஹீரோவாக நடித்துள்ள படம், ‘ரகளபுரம்’. அங்கனா ராய், கோவை சரளா, சஞ்சனா சிங், மயில்சாமி உட்பட பலர் நடித்துள்ளனர்.
மனோ இயக்கியுள்ளார்.
படம் பற்றி கருணாஸ் கூறியதாவது: கடந்த 4,ம் தேதி படம் ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும். ஆனால், அதிக படங்கள் ரிலீசானதால், 18ம் தேதிக்கு மாற்றி வைத்தோம். இப்போது டிஜிட்டலில் படம் தயாரிப்பது எளிதாகி விட்டது.
ஆனால், ரிலீஸ் செய்வது கடினமான விஷயமாக மாறியுள்ளது.
அதற்கு பெரிய முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது. என்றாலும், ‘ரகளபுரம்’ படத்துக்கு 200 தியேட்டர்கள் கிடைத்துள்ளது. இதுவரை வந்த எனது படங்களிலேயே அல்டிமேட் காமெடி படம் இது.
ஆரோக்கியமான காமெடிதான் என் பலம். ஆரம்பம் முதல் இறுதிவரை நான்,ஸ்டாப்பாக சிரித்துக் கொண்டிருக்கலாம். காமெடி போலீஸ் கதையாக இருந்தாலும், சொல்ல வந்த விஷயத்தை சரியாகச் சொல்லியிருக்கிறோம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment