பிரஷ்ஷாக இருக்கிறார் மீரா ஜாஸ்மின்

No comments
இங்க என்ன சொல்லுது திரைப்படத்தின் மூலம் தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வரப்போகிறாராம் மீரா ஜாஸ்மின். மல்லுவுட் சினிமா உலகில் ராஜேசுடன் காதல், சினிமா நிகழ்ச்சிகள் புறக்கணிப்பு என்று பல சர்சைகளில் சிக்கிவந்தார் மீரா. 


 தற்போது அந்த பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து மல்லுவுட் உலகம் அவருக்கு வழிவிட்டதோடு, கொலிவுட் உலகமும் அவரை அழைத்திருக்கிறது. தற்போது தமிழில் வி.டி.வி கணேஷுடன் நடித்து வருகிறார்.

 இந்த படத்தில் சந்தானம், சிம்பு என்று மேலும் சில முக்கிய நடிகர்கள் நடிப்பதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. அப்படியே மீராஜாஸ்மின் தமிழில் ஒரு ரவுண்டு வருவதற்கான அத்தனை சங்கதிகளும் இப்படத்தில் இருப்பதாக நம்புகிறது சினிமா வட்டாரம்

. இது தவிர தினந்தோறும் யாராவது போன் செய்து கதை சொல்லணும் என்று கேட்கிறார்களாம். அவர்களிடம் எவ்வித அவசரமும் காட்டாமல், இங்க என்ன சொல்லுது படம் வந்துரட்டும் பிறகு பார்க்கலாம் என்கிறாராம்.

No comments :

Post a Comment