விருதை ஏற்க கமல் தயக்கம்
குறைந்த வயதுடைய எனக்கு விருது எதற்கு என்று விருதினை திருப்பி தரப்போகிறாராம் உலகநாயகன்.
மும்பையில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் கமலஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.
ஆனால் இந்த விருதை ஏற்கலாமா, வேண்டாமா என்ற யோசனையில் உள்ளாராம் கமல்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த விருதை பெற எனக்கு தகுதி இருக்கிறதா, இல்லையா என்று தெரியவில்லை. ஆனாலும் விருதுக்கு என்னை பரிந்துரை செய்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.
இது எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதோடு, இன்னும் உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டி விடுவதாகவும் இருக்கும்.
அதே நேரம் வயதான நடிகர்களுக்கு கொடுக்கும் இந்த விருதை வயது குறைந்த இந்தக் கமலஹாசனுக்கு கொடுக்கலாமா என்று பேசுபவர்களுக்கு நான் ஒரு விடயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நீங்கள் கொஞ்சம் பொறுத்திருங்கள், இந்த விருதை வேண்டாம் என்று மறுக்கவும் வேறு வயதான நடிகர்களுக்கு கொடுங்கள் என சிபாரிசு செய்யவும் நான் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment