மனிதாபிமானம் கொண்ட ஹன்சிகா!
சமீபகாலமாக மனிநேயம், மனிதாபிமானமெல்லாம் செத்துக்கொண்டிருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், அது ஹன்சிகா போன்ற சில நல்ல மனம் கொண்டவர்களால் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை ஒரு சம்பவம் உறுதிபடுத்தியுள்ளது.
அதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்பு, மும்பையிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்திறங்கிய ஹன்சிகா, அங்கிருந்து காரில் ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்தாராம். அப்போது, சாலையில் ஒரு முதியவர் மீது ஏதோ வாகனம் மோதி அவரை கீழே தள்ளிவிட்டு சென்றிருக்கிறது.
ஆனால் அவரை யாருமே கண்டுகொள்ளாமல் சென்று கொண்டிருந்தார்களாம்.
ஆனால் அவரைப்பார்த்து விட்ட, ஹன்சிகாவும், அவரது தாயாரும் காரில் இருந்து இறங்கி, அந்த இடத்துக்கு ஆம்புலன்சை வரவைத்து அந்த முதியவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்களாம். அப்போது ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு டாக்டரான ஹன்சிகாவின் அம்மாவும் உடன் சென்றாராம்.
ஆனால், விபத்தில் முதியவர் காயமடைந்து சாலையில் கிடந்தபோது யாருமே இல்லாமல் இருந்த அந்த இடத்தில் ஹன்சிகாவைக்கண்டதும் மாநாடு போன்று ஒரு பெரும் கூட்டமே கூடிவிட்டதாம். அவர்களை அங்கிருந்து கலைப்பதற்குள் பெரும்பாடு பட்டார்களாம் போலீசார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment