ஆரம்பம் கௌண்ட் டவுன் ஸ்டார்ட்

No comments
தீபாவளி சரவெடியில் வெடிப்பதற்கு கௌண்ட் டவுனை ஸ்டார்ட் செய்து விட்டது அஜித்தின் ஆரம்பம். உலக அளவில் அஜித் ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் ஆரம்பம்.

 விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்துடன் சேர்ந்து ஆர்யா, நயன்தாரா, டாப்சி ஆகியோர் நடித்துள்ளார்கள். தீபாவளி வெளியீடு என்று அறிவித்து விட்ட நிலையில் ரீரிக்கார்டிங், டப்பிங் என பல வேலைகள் முடிந்துவிட்டன.

 மேலும் படத்தின் பின்னணி இசை கோர்வும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாம். இதற்காக இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும், இயக்குனர் விஷ்ணுவர்த்தனும் இரவு பகல் பாராமல் உழைத்த வண்ணம் உள்ளனர்.

 மொத்தத்தில் இப்படம் அமர்களமான ஆரம்பமாக தீபாவளி சரவெடியில் வெடிக்க தயாராகி வருகிறது என்கிறது சினிமா வட்டாரம்.

No comments :

Post a Comment